செய்திகள்
ஜிம்மாவுடன் வின்னி

இங்கிலாந்தில் அதிசயம்- குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்

Published On 2018-07-17 06:36 GMT   |   Update On 2018-07-17 06:36 GMT
இங்கிலாந்தில் குழந்தையின் மூளையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தில், இறந்துபோன அவரது தாத்தாவின் முகம் தெரிந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் அடைந்தனர்.
லண்டன்:

இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி டேன் குர்ரான்- ஜிம்மாஹுஜஸ். இவர்களுக்கு மைஜீ என்ற 7 வயது மகளும், வின்னி என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.

வின்னி பிறந்த 10 வாரத்தில் அவனுக்கு ‘மெனின்கிடிஸ்’ எனப்படும் மூளையுறை அழற்சி நோய் ஏற்பட்டது. அதற்காக அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மூளையில் ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது.

அந்த ஸ்கேன் படத்தை பார்த்து ஜிம்மா ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில் அதில் ஜிம்மாவின் மாமனாரான ஐயன் முகம் போன்ற உருவம் தெரிந்தது. ஐயன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.

ஐயன்

இதற்கிடையே ‘ஸ்கேன்’ படம் குறித்து தனது கணவர் டேன் மற்றும் மாமியார் ஜோவிடமும் ஜிம்மா கூறினார். முதலில் அதை ஏற்காத இருவரும் பின்னர் போட்டோவை பார்த்து விட்டு ஏற்றுக் கொண்டனர்.

இது குறித்து ஜிம்மா கூறும்போது, “எனக்கு 2015-ம் ஆண்டு கருக்கலைப்பு ஏற்பட்டு பின்னர் தான் வின்னி உருவானான். அப்போது இருந்தே பல சமயங்களில் என் மாமனார்தான் அவனை காப்பாற்றினார் என நம்புகிறேன். தற்போது குழந்தையின் நோயை கண்டறிந்து காப்பாற்றி வருகிறார். இதனால் தான் அவனுக்கு தாத்தா பெயரையும் சேர்த்து வின்னி ஐயன் என பெயர் வைத்துள்ளோம்” என்றார்.
Tags:    

Similar News