செய்திகள்

மாலி நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 பேர் பலி

Published On 2018-06-29 21:42 GMT   |   Update On 2018-06-29 21:42 GMT
மாலி நாட்டில் ஆப்ரிக்க ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். #Mali #Africanmilitarybase

பமாகோ:

ஆப்பிரிக்க நாடான மாலியில் தியூரக் பயங்ரவாதிகளை ஒடுக்க கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ளது. அதோடு மற்ற சில ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ராணுவத்தினரும் பயங்கரவாதிகள் ஒடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மத்திய மாலி பகுதியில் உள்ள செவாரி நகரில் ஆப்ரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் வெடிகுண்டு நிரப்பிய கார்களை முகாம்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களால் ராணுவ முகாமில் இருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இந்த தாக்குதலில் ஆறு பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mali #Africanmilitarybase
Tags:    

Similar News