செய்திகள்

இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்

Published On 2018-06-29 11:09 GMT   |   Update On 2018-06-29 11:09 GMT
பிரிட்டனுக்கு பணிக்கு சென்று அங்கேயே வாழும் பிற நாட்டவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்ற சமீபத்திய அறிவிப்பை திரும்பப்பெறும் திட்டமில்லை என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. #UKImmigrantPolicy #India
லண்டன்:

பிரிட்டன் அரசு சமீபத்தில் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கியது. இந்தியா உள்ளிட்ட அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் பணிபுரிந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பிரிட்டனில் உயர் பணிகளில் இருக்கும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

இதனை கண்டித்து அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மிகப்பெரிய பிரசாரம் மேற்கொண்டனர். அரசின் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

இதையடுத்து, குடியுரிமை விதி குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய குடியுரிமை மந்திரி கரோலின் நோக்ஸ், அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் பணி புரிபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். #UKImmigrantPolicy #India
Tags:    

Similar News