செய்திகள்

கவுதமாலா துணை ஜனாதிபதி ஜபித் காப்ரிராவை சந்தித்தார் வெங்கையா நாயுடு

Published On 2018-05-08 10:13 GMT   |   Update On 2018-05-08 10:13 GMT
கவுதமாலா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜபித் காப்ரிராவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #Guatemala #VicePresidentofGuatemala
கவுதமாலா சிட்டி:

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற வெங்கையா நாயுடு, முதல் முறையாக கவுதமாலா நாட்டுக்கு நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர் ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெசை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.

பின்னர் அந்நாட்டு துணை ஜனாதிபதியான ஜபித் காப்ரிராவை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் இரு நாட்டுக்கு இடையேயான வியாபாரம் மற்றும் பொருளாதாரத்தை வளர்ப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அது குறித்து உடன்படிக்கை செய்துகொண்டனர். குறிப்பாக இருதரப்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், கவுதமாலயாவை சர்வதேச சோலார் திட்டத்தில் இணையுமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. வெங்கையா நாயுடு கவுதமாலயா பாராளுமன்றத்திற்கு சென்று சபாநாயகருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். கவுதமாலயாவில் சூரிய சக்தி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிப்பதன் மூலம் பெண்கள் சக்தியை முன்னேற்ற முடியும்.  ஆற்றலை புதுப்பித்தல் மற்றும் தூய ஆற்றல் குறித்தும் பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்து பேசினர்.

இதைத்தொடர்ந்து பனாமா மற்றும் பெரு நாட்டுக்கு செல்லும் வெங்கையா நாயுடு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofGuatemala #Guatemala
Tags:    

Similar News