செய்திகள்

இந்தியா-மங்கோலியா இடையே ஒப்பந்தங்கள் கையொப்பமானது

Published On 2018-04-25 08:10 GMT   |   Update On 2018-04-25 08:10 GMT
இந்தியா-மங்கோலியா இடையே ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். #sushmaswaraj #india #mongolia
உளான்பாத்தர்:

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக மங்கோலியா சென்றுள்ளார். இன்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தம்தின் சோக்படாரை சந்தித்து பேசினார். அப்போது சில ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உலகளாவிய பிரச்சனைகள் குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசனை செய்தனர்.

இதுகுறித்து பேசிய சுஷ்மா, 'இந்த சந்திப்பு இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக அமைந்தது. நாங்கள் பொருளாதாரம், வியாபாரம், அறிவியல், விவசாயம், கலாச்சாரம், கல்வி, தொலைத்தொடர்பு மற்றும் சுற்றுலா குறித்து பேசினோம். இருநாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகள் செய்யப்படும்.

இரு நாட்டு உறவை மேம்படுத்தும் விதமாக மங்கோலியா நாட்டு மாணவர்கள் இந்தியா வந்து படிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மங்கோலியாவில் புத்த மதம் பாரம்பரியமாக உள்ளது. அது குறித்து ஆராய்ச்சி செய்ய மாணவர்கள் இந்தியா வரலாம்' என கூறினார். #sushmaswaraj #india #mongolia
    

Tags:    

Similar News