வங்காளதேசத்தின் அதிபராக இருந்த அப்துல் ஹமீத் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பதவியேற்றார். #BangladeshPresident #AbdulHamid
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அப்துல் ஹமீத் அதிபராக இருந்து வருகிறார். பாராளுமன்ற சபாநாயகராக இருந்த அப்துல் ஹமீத், 2013 மார்ச் மாதத்தில் அப்போதைய அதிபர் சிலுர் ரஹ்மான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பொறுப்பை ஏற்றார்.
சிலுர் ரஹ்மான் காலமானதை தொடர்ந்து அதிபராக அப்துல் ஹமீத் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது முறையாக அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இன்று அதிபர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
பாராளுமன்ற சபாநாயகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் சேக் ஹசீனா, மந்திரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #AbdulHamid #BangladeshPresident