செய்திகள்

சீனாவில் ஊழியர் இன்றி தானாக இயங்கும் வங்கி

Published On 2018-04-24 06:19 GMT   |   Update On 2018-04-24 06:19 GMT
சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் முதன் முறையாக ஊழியர் இன்றி செயல்படும் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. #Chinabanking

ஷாங்காய்:

சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் ஹுயாங்பூ மாவட்டத்தில் முதன் முறையாக ஊழியர் இன்றி தானாக இயங்கும் அரசு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு அனைத்து பணிகளையும் எந்திரங்களே கவனிக்கின்றன. மனிதர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் மென்பொருளுடன் கூடிய கம்ப்யூட்டர், ஹோலோகிராம் எந்திரம், பேசும் ரோபோக்கள், தொடு திரைகள் என இவை அனைத்தும் ஊழியர்களின் பணியை திறம்பட செய்கின்றன. பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் பில் போடுதல் போன்ற பணிகளையும் செய்கின்றன.

இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை அங்குள்ள ரோபோ வாயிலில் வரவேற்கிறது. கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. அதன் பின்னர் வாடிக்கையாளரின் தேசிய அடையாள அட்டை, முக அடையாளங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் பின்னர் வங்கி பரிவர்த்தனை பணிகள் நடக்கிறது.

இந்த வங்கியில் தங்கம் விற்பனை, பண மாற்றம், ரியல் எஸ்டேட் முதலீடு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இந்த வங்கிக்கு பாதுகாவலர்களும், குறிப்பிட்ட பணிக்கு ஒரு சில ஊழியர்களும் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Chinabanking

Tags:    

Similar News