செய்திகள்

எதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு

Published On 2018-04-20 08:32 GMT   |   Update On 2018-04-20 08:32 GMT
ஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். #explodingant
போர்னியோ:

ஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் புதியதாக 15 எறும்பு இனங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதில் வித்தியாசமான எறும்பு ரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எறும்புகளின் பாதுகாப்பு அமைப்பு மற்ற எறும்பு இனத்திடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

கோலோபோசிஸ் எக்ஸ்ப்லோடன்ஸ் என்ற இந்த வகை எறும்புகள் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற தானாக முன்வந்து உயிர் தியாகம் செய்கின்றன. அதாவது மற்ற பூச்சி இனம் தங்களை தாக்க வந்தால் அவை ஒரு வித திரவத்தினை வெளியிடுகின்றன. நச்சுத்தன்மையுடன் இருக்கும் இந்த திரவம் எதிரிகளை தடுக்கும் அல்லது கொல்லும் திறன் கொண்டது. ஆனால் இதனை வெளியிட எறும்புகள் தங்கள் முழு சக்தியினை பயன்படுத்துவதால் அவை உயிரை விடுகின்றன.

உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு இனமானது போர்னியோ தீவுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு எறும்பு இனம் இருந்ததாக 1916-ம் ஆண்டு கூறப்பட்டது. ஆனால் அதனை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. #explodingant

Tags:    

Similar News