செய்திகள்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் பால்டன் நியமனம்

Published On 2018-03-22 23:53 GMT   |   Update On 2018-03-22 23:53 GMT
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து தனக்கு நம்பிக்கையான நபர்களுக்கு உயர் பதவிகளை அளித்து வருகிறார். அமெரிக்காவின்  தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வருபவர்  மெக் மாஸ்டர்.



இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் ஐ நா தூதராக பணியாற்றிய ஜான் பால்டன் என்பவரை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் பால்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை செயல்பட்டு வந்த மெக் மாஸ்டர் சிறப்பாக பணியாற்றியுள்ளார், அவரது பணிகள் என்றும் நினைவு கூரத்தக்கவை என பதிவிட்டுள்ளார்.
 
டிரம்ப் பதவியேற்ற 14 மாதங்களில் மூன்றாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் என்பதும், அடுத்த மாதம் இவர் பொறுப்பேற்பார் என்பதும், இவர் ஐ.நா.வுக்கான தூதராக ஏற்கனவே பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News