செய்திகள்

பணம் கட்டாததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை

Published On 2018-02-14 19:46 GMT   |   Update On 2018-02-14 19:46 GMT
காபோன் நாட்டில் பிரசவத்துக்கு உண்டான பில்லை கட்டாததால் ஐந்து மாதங்களாக பிறந்த குழந்தையை பெற்ற தாயிடம் மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. #Gabon #BabyGirlHeld #UnpaidMedicalBills
லிப்ரவில்:

மத்திய ஆப்பிரிக்காவின் காபான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் மருத்துவமனை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக அம்மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகை இல்லாததால் அந்த தாய் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த செய்தி இணையத்தில் வெளியானது. இதையடுத்து சமூகவலைத்தள பயனாளிகள் அந்த தாய்க்காக பணம் வசூலித்து கொடுத்தனர். இதன்மூலம் பில் தொகை கட்டப்பட்ட பின்னர் ஒருவழியாக ஐந்து மாதங்கள் கழித்து குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐந்து மாதங்களாக தாயிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்ததாக மருத்துவமனையின் இயக்குனர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் சோனியா ஓகோம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை போலீசார் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் காபான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gabon #BabyGirlHeld #UnpaidMedicalBills #tamilnews
Tags:    

Similar News