செய்திகள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி பிரமாண்ட ராணுவ அணிவகுப்புக்கு வடகொரியா ஏற்பாடு

Published On 2018-02-01 00:49 GMT   |   Update On 2018-02-01 00:49 GMT
குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி, 8-ந் தேதி வடகொரியா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக சி.என்.என். தெரிவிக்கிறது. #NorthKorea #StageParade #Olympics
சியோல்:

தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 9-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதி முடிகிறது. இந்த போட்டியில் அண்டை நாடான வடகொரியா பங்கேற்கிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி, 8-ந் தேதி வடகொரியா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக சி.என்.என். தெரிவிக்கிறது. இந்த ராணுவ அணிவகுப்பின்போது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ராக்கெட்டுகள் இடம் பெற உள்ளன. இது தனது படை பலத்தைக் காட்டி அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு வடகொரியா மேற்கொள்ளப்போகிற முயற்சி என தகவல்கள் கூறுகின்றன.

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற வல்லமை மிக்க ‘ஹவாசாங்-15’ ரக ஏவுகணைகள் டஜன்கணக்கில் ராணுவ அணிவகுப்பில் இடம்பெற உள்ளனவாம். தற்போது கொரிய தீபகற்ப பகுதியில், படைகளை அமர்த்தியுள்ள அமெரிக்காவை மிரட்டுகிற வகையில் ஏவுகணை சோதனை ஒன்றையும் வடகொரியா நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #NorthKorea #StageParade #Olympics #tamilnews
Tags:    

Similar News