செய்திகள்

சவுதி அரேபியா மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்

Published On 2018-01-20 13:51 GMT   |   Update On 2018-01-20 13:51 GMT
சவுதி அரேபியா மீது ஏமன் நாட்டு ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துபாய்:

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சவுதி அரேபியாவின் நர்ஜான் மாகாணத்தில் ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் ரியாத் மற்றும் டெஹ்ரான் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News