செய்திகள்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி

Published On 2018-01-20 04:46 GMT   |   Update On 2018-01-20 04:46 GMT
கனடா நாட்டின் ஆன்டாரியோ மாகாணத்தின் முதல்-மந்திரியான காத்லின் வின்னி தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி அளித்து இருக்கிறார்.
ஒட்டவா:

கனடா நாட்டின் ஆன்டாரியோ மாகாணத்தில் முதல்-மந்திரியாக காத்லின் வின்னி உள்ளார். இவர் தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் அவர் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி அளித்து இருக்கிறார். அவர்கள், ஹரிந்தர் மால்ஹி (வயது 38) மற்றும் இந்திரா நைதூ ஹாரீஸ் ஆவார்கள்.

இவர்களில் ஹரிந்தர் மால்ஹி, அந்த நாட்டின் முதல் சீக்கிய எம்.பி.யான குர்பாக்ஸ் சிங் மால்ஹியின் மகள் ஆவார். ஹரிந்தர் மால்ஹிக்கு, பெண்கள் நலத்துறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்திரா நைதூ ஹாரீஸ்வுக்கு கல்வித்துறை பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அங்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதல்-மந்திரி காத்லின் தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து, அதில் இந்தியர்களுக்கு வாய்ப்பு அளித்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. கனடாவில் 12 லட்சம் இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி அளித்து உள்ளதால் அது தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு இந்தியர்களின் வாக்குகளை அள்ளுவதற்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews

Tags:    

Similar News