செய்திகள்

ஐரோப்பா கண்டத்தில் கார்களை விட மைக்ரோவேவ் ஓவன்களால் சுற்று சூழல் பாதிப்பு

Published On 2018-01-19 09:24 GMT   |   Update On 2018-01-19 09:24 GMT
மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற அதிநவீன எலெக்ட்ரானிக் கருவிகளால் மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நவீன உலகத்தில் மைக்ரோவேவ் ஓவன்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அப்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் ஆண்டுக்கு 70 லட்சத்து 70 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுவது தெரிய வந்தது. அது 68 லட்சம் கார்கள் வெளியேற்றும் கார்பன்டை ஆக்சைடு நச்சு புகைக்கு ஈடானதாகும்.

இதன்மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற அதிநவீன எலெக்ட்ரானிக் கருவிகளால் மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. #TamilNews
Tags:    

Similar News