செய்திகள்

கென்யாவிற்கு கடத்தப்பட்ட 3 இந்திய சிறுமிகள் உட்பட 10 பேர் மீட்பு - சுஷ்மா சுவராஜ்

Published On 2018-01-04 07:13 GMT   |   Update On 2018-01-04 07:13 GMT
தென்ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடத்தி வைக்கப்பட்டிருந்த 3 இந்திய சிறுமிகள் உட்பட 10 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
புதுடெல்லி:

தென்ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவிற்கு இந்தியாவைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். இதன் பின்னணியில் மிகப்பெரிய கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தததாக தகவல் வந்தது. தற்போது அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா தகவல் தெரிவித்துள்ளார்.

'கென்யாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளை மீட்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டது. கென்யாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் 3 இந்திய சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். குழந்தை கடத்தல் குறித்து பஞ்சாப் மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்' என சுஷ்மா டுவிட் செய்துள்ளார்.

மேலும், அவர்களுடன் கடத்தி வைக்கப்பட்டிருந்த நேபாளத்தைச் சேர்ந்த 7 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். இவர்களின் பாஸ்போர்ட் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டு கென்யாவின் தலைநகரான மாம்பாசாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறுமிகளை மீட்க உதவி செய்த இந்திய தூதரக அதிகாரி சுசித்ரா துரை மற்றும் செயலாளர் கரண் யாதவ் ஆகிய இருவரின் முயற்சிக்கு சுஷ்மா பாராட்டு தெரிவித்துள்ளார். உதவி செய்த வெனிஸ் நகர போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். #tamilnews

Tags:    

Similar News