செய்திகள்

அமெரிக்கா: நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக இந்திய வம்சாவளி சீக்கியர் நியமனம்

Published On 2017-12-13 13:58 GMT   |   Update On 2017-12-13 13:58 GMT
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக இந்திய வம்சாவளி சீக்கியரான குர்பிர் எஸ் கிரேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள  நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக இந்திய வம்சாவளி சீக்கியரான குர்பிர் எஸ் கிரேவால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றும் இந்திய வம்சாவளி நபர் என்ற சிறப்பிடத்தை இவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, கடந்த 2004-2007-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் உதவி தலைமை வழக்கறிஞராகவும், 2010-2016 வரை நியூ ஜெர்சி மாநிலத்தின் உதவி தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த குர்பிர் எஸ் கிரேவால் நியூ ஜெர்சி மாநிலத்தின் புதிய  தலைமை வழக்கறிஞராக (அட்டார்னி ஜெனரல்) நியமித்து நியூ ஜெர்சி மாநில கவர்னர் பில் மர்பி நேற்று உத்தரவிட்டார்.

நியூ ஜெர்சி ஆசிய பசிபிக் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினராகவும் உள்ள குர்பிர் எஸ் கிரேவாலின் புதிய பணி நியமனத்துக்கு தெற்காசிய வழக்கறிஞர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News