செய்திகள்

சீனாவில் 62 மாடி கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் மரணம்

Published On 2017-12-12 08:06 GMT   |   Update On 2017-12-12 08:06 GMT
சீனாவில் 62 மாடி கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணமடைந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பீஜிங்:

சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்வார். அதனை வீடியோ எடுத்து சீன இணையதளங்களில் பதிவு செய்து வந்தார். அவரின் சாகசங்களை கண்டு அவரை சீனாவின் சூப்பர்மேன் என்று அழைத்தனர்.

ஆனால் அவரின் சாகச முயற்சியே அவருடைய மரணத்திற்கு காரணமாக அமைந்தது. யாங்கிங் சீனாவில் உள்ள 62 மாடி கட்டிடத்தின் மாடியில் சாகசம் செய்வதற்காக தயாரானார். அதை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர். அவர் மாடியில் புல்-அப் செய்தார். இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தை பிடித்திருந்தார். சில நிமிடங்களில் கை நழுவி கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

யாங்கிங் உயரமான கட்டிடத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, பாலத்தின் முனையில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்து அதனை இணையங்களில் பதிவு செய்வார்.

சாகசம் செய்ய முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கீழே விழும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News