செய்திகள்

3 ஆயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் திகழ்கிறது: நேட்டன்யாஹூ

Published On 2017-12-12 03:40 GMT   |   Update On 2017-12-12 03:41 GMT
மூன்றாயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் திகழ்ந்து வருகிறது என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார்.
பாரீஸ்:

இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 6-ந் தேதி வாஷிங்டன் நகரில் அறிவிப்பு வெளியிட்டார். டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அந்நாட்டின் அதிபர் மேக்ருனை சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

3 ஆயிரம் ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் திகழ்ந்து வருகிறது. பாலஸ்தீனர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் பைபிள் என்கிற சிறந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். பைபிள் வாசித்து முடித்த பின்னர் யூதர்களின் முழுமையான வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். அப்போது புரியும் உங்களுக்கு இஸ்ரேலின் தலைநகர் எது என்பது. பாலஸ்தீனர்கள் கூடிய விரைவில் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியானால்தான் நாம் அமைதியை நோக்கி விரைந்து செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News