செய்திகள்

நியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் - டிரம்ப்

Published On 2017-12-12 01:08 GMT   |   Update On 2017-12-12 01:08 GMT
நியூயார்க் குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை திடீரென்று மர்மப் பொருள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட பயங்கர ஓசையால் அப்பகுதியில் இருந்தவர்கள் பீதியுடன் அலறியடித்து ஓட தொடங்கினர்.

இதையடுத்து அதே பகுதியில் உள்ள சுரங்க நடைபாதையில் மேலும் ஒரு வெடிப்பொருளுடன் வந்த ஒரு மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அவர் வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளராக இருக்கலாம் என சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். அவர் குடும்ப புலம்பெயர்தல் வீசா மூலம் அமெரிக்கா வந்துள்ளார். இந்த திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவே அமெரிக்க குடியேற்ற சட்டத்த்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்’, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News