செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: பாலி தீவில் விமானநிலையம் மூடல்

Published On 2017-11-28 09:24 GMT   |   Update On 2017-11-28 09:24 GMT
இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ஆகுங் எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளதால் பாலி தீவில் உள்ள விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள ‘ஆகுங்’ என்ற எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கும் நிலையில் உள்ளது.

தற்போது அதன் சீற்றம் அதிகரித்துள்ளது. இதனால் அதை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் வெளியேறாத மக்களும் கட்டாயமாக வெளியேற்றப்பட உள்ளனர்.

மலை உச்சியில் 11,150 அடி கரும்புகை சூழ்ந்துள்ளது. சாம்பல் துகள்கள் வெளியேறுகிறது. வெடிக்கும் சத்தம் மலை உச்சியில் இருந்து 12 கி.மீ. தூரம் வரை கேட்கிறது. இரவில் தீக்கதிர்கள் காணப்பட்டன. தீக்குழம்பு வெளியேறி வருகிறது.

பாலி ஒரு முக்கிய சுற்றுலா தளமாகும். அங்குள்ள முக்கிய இடங்களான குட்டா மற்றும் செமின்யாக் எரிமலையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளன. அதிக அளவு சாம்பல் துகள்கள் காரணமாக அங்குள்ள நுகுரோ விமானநிலையம் 2 நாட்களாக மூடப்பட்டது. எனவே அங்கு வந்து செல்லும் 445 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

59 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கி தவிக்கின்றனர்.
Tags:    

Similar News