செய்திகள்

உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் சீனாவில் அறிமுகம்: வீடியோ

Published On 2017-11-01 06:01 GMT   |   Update On 2017-11-01 06:01 GMT
தண்டவாளம் எதுவும் இன்றி சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:

சீனாவில் சாலையில் வரையப்பட்டுள்ள கோட்டின் மீது மணிக்கு 70 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து பயணத்தை தொடங்கி உள்ளது.



ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் இந்த ரெயில் மூன்று பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் 300 பேர் பயணம் செய்யலாம். மற்ற ரெயில் அல்லது டிராம் போக்குவரத்திற்கு ஆகும் செலவை விட குறைந்த அளவான தொகையே இதற்கு செலவாகிறது.



தற்சமயம் ஹூனான் மாகாணம் சுஜோவ் நகரில் நான்கு நிலையங்களை கொண்ட 3.1 கி.மீ. தொலைவிற்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு, ரெயில் இயக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் முக்கிய சாலைகளில் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் ரெயிலானது டிரைவர் இல்லாமல் தானாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் டிரைவர் இருப்பார். அதன் பின் முழுவதுமாக தானியங்கி வாகனமாக செயல்படும் என கூறப்படுகிறது. இது மக்களுக்கு மிகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News