செய்திகள்

புதிய கிரகங்களாக மாறும் வால் நட்சத்திரங்கள்: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Published On 2017-10-24 05:00 GMT   |   Update On 2017-10-24 05:00 GMT
வால் நட்சத்திரங்களின் உடைந்த நீள் வட்டவளையங்கள் ஒன்றிணைந்து புதிய கிரகங்களாக உருவாகியுள்ளதை சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை நிறுவியுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உலாவரும் புதிய கிரகங்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வால் நட்சத்திரங்களின் உடைந்த நீள் வட்டவளையங்கள் ஒன்றிணைந்து புதிய கிரகங்களாக உருவாகியுள்ளதை சமீபத்தில் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.


இவை பூமியை போன்று பல மடங்கு அளவு கொண்டவை. இத்தகவலை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஜான்ஸ் கோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.


நீள்வட்ட வளையங்கள் அதிக அளவிலான கார்பன் உள்ளிட்ட பல்வேறு மூலக் கூறுகளால் ஆனது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புதிய கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருந்து 3 மடங்கு தொலைவில் இருப்பது நாசா நிறுவிய டெலஸ் கோப்புகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News