செய்திகள்
கோப்புப்படம்

சிரியா: 116 பேரை கொன்று குவித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டகாசம்

Published On 2017-10-23 10:31 GMT   |   Update On 2017-10-23 10:31 GMT
சிரியாவில் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது பொதுமக்களில் 116 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்த தகவல் வெளியாகியுள்ளது.
டமாஸ்கஸ்:

சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.

யூப்ரட்ட்எஸ் ஆற்றுப்பகுதியில் டெய்ர்-அல்-ஸோர் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான அல்-மயாடின் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து அரசுப் படைகள் கடந்த மாதம் மீட்டன. இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஓமர் பெட்ரோல் வயலை அமெரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.

கோப்புப்படம்

சிரியாவின் மிகப்பெரிய அல்-ஓமர் பெட்ரோல் வயலை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சிரியாவில் நடைபெற்ற உச்சகட்ட போரின்போது கடந்த 20 நாட்களில் பொதுமக்களில் 116 பேரை அரசின் உளவாளிகள் என சந்தேகித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்ததாக அங்கு போர் நிலைமைகளை பார்வையிட்டுவரும் பிரிட்டன் நாட்டு மனித உரிமை கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News