செய்திகள்

சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு மாநாட்டில் வடகொரியா, பாகிஸ்தான் கலந்து கொள்ளாது: ராம் விலாஸ் பஸ்வான்

Published On 2017-10-21 14:30 GMT   |   Update On 2017-10-21 14:30 GMT
இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வடகொரியா மற்றும் பாகிஸ்தான் அழைக்கப்படவில்லை மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

வர்த்தகம் மற்றும் முன்னேற்றத்திக்கான ஐ.நா. மாநாடு வேண்டுகோளை ஏற்று சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு மாநாடு வருகிற 26 மற்றும் 27-ம் தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 23 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள் பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அழைக்கப்படவில்லை என மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இரண்டு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அழைப்பு விடுத்துருக்கும் நாடுகளுக்கு உட்பட்ட பகுதியில் அந்த இரு நாடுகளும் அமைந்துள்ளது. அவை வடகொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். சீனா உட்பட மற்ற அனைத்து நாடுகளையும் அழைத்துள்ளோம்” எனக் கூறினார்.



இருப்பினும் இந்த இரு நாடுகளை எதற்காக அழைக்கவில்லை என்பதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. முதலில் அரசிற்கு அனுப்பப்பட்ட பட்டியல் அந்த இரண்டு நாடுகளின் பெயர்களை உள்ளடக்கி இருந்ததாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதன் சம்பந்தமாக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விவாதிப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News