செய்திகள்

சுவிச்சர்லாந்திற்கான இந்திய தூதராக சிபி ஜார்ஜ் நியமனம்

Published On 2017-10-21 12:09 GMT   |   Update On 2017-10-21 12:09 GMT
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சிபி ஜார்ஜ் சுவிச்சர்லாந்திற்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

1993 இந்திய வனத்துறை அதிகாரியான சிபி ஜார்ஜ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணை செயலாராக பணியாற்றி வருகிறார்.



இந்நிலையில், சிபி சுவிச்சர்லாந்திற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்சமயம் சுமிதா புருஷோத்தமன் தூதராக உள்ளார். அவரின் இடத்தில் சிபி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் சிபி பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கு முன் சிபி ஜார்ஜ், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தலைவராக பணியாற்றி உள்ளார். 2014 ம் ஆண்டு வெளியுறவுத்துறை தூதராக சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு எஸ்.கே.சிங் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News