செய்திகள்

அமெரிக்காவில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை

Published On 2017-10-08 08:44 GMT   |   Update On 2017-10-08 08:44 GMT
ஆத்திரத்தில் மனைவியை 40 முறை கத்தியால் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டு சிறை சிறை தண்டனை விதித்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள சலேம் பகுதியில் வசித்து வந்தவர் நிதின் சிங்(48). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது மனைவி சீமா சிங்(42). இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிதினை விட்டு பிரிந்து செல்ல சீமா தீர்மானித்தார்.

தனது குழந்தைகளையும் நிதினுக்கு சொந்தமான பணத்தையும் தன்னுடன் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததை அறிந்த நிதின், கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சீமாவுடன் வாக்குவாதம் செய்தார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நிதின் படுக்கை அறையில் இருந்த சீமாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

உடலில் 40 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சீமா, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகிலை தொடர்பாக நிதினை கைது செய்த போலீசார், சலேம் நகர கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி நிதினை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். தண்டனை காலத்தில் 85 சதவீதம் நாட்களை கடக்கும்வரை அவரை பரோலில் விடுவிக்கவும் நீதிபதி லின்டா லாவ்ஹன் தடை விதித்துள்ளார்.
Tags:    

Similar News