செய்திகள்

வெள்ளை மாளிகை அருகே சிறுநீர் கழிக்கச்சென்று வம்பில் மாட்டிய நபர்

Published On 2017-09-25 08:30 GMT   |   Update On 2017-09-25 08:30 GMT
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே சிறுநீர் கழிக்கச் சென்ற ஒருவரது காரில் அதிகளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவியது.
வாஷிங்டன்:

அமெரிக்கா அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று காலை வெள்ளை மாளிகையின் அருகே இருக்கும் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ள ஒரு கழிப்பிடத்தில் மர்மநபர் ஒருவர் சென்றுள்ளார்.

அவரது நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்த ரகசிய பிரிவு போலீசார், அந்நபரை தனியே அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது, அவருடைய காரை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஒன்பது கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ரைபில், கத்திகள் மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் என ஒரு சிறிய ஆயுத கிடங்கே அந்த காரில் செயல்பட்டு வந்துள்ளது.

உடனடியாக, அந்நபரை கைது செய்த அதிகாரிகள் மனநல சோதனைக்காக அவரை கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.
Tags:    

Similar News