செய்திகள்

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - பாகிஸ்தான் ராணுவம் பெருமிதம்

Published On 2017-09-23 09:52 GMT   |   Update On 2017-09-23 09:52 GMT
பாகிஸ்தானின் வடக்கு அரேபிய கடல் பகுதியில் நடத்தப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக அந்நாட்டு ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் வடக்கு அரேபிய கடல் பகுதியில் அந்நாட்டு ராணுவம் இன்று, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. 

ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை குறித்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக பாகிஸ்தான் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த சோதனை பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹமது சகவுல்லாவின் மேற்பார்வையில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சோதனை வெற்றிக்கு பின்னர் பேசிய மொஹமது சகவுல்லா, “இந்த ஏவுகணை சோதனை வெற்றி, எப்போது போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராக இருக்கிறது என்பதையும் பாகிஸ்தான் கடற்படையினரின் தொழில் திறமை காட்டுகிறது. பாகிஸ்தான் கடற்படை எந்தவொரு நிலையிலும் தாய்நாட்டையும், அதன் நீர் எல்லைகளையும் பாதுகாக்கும்”, என கூறினார்.
Tags:    

Similar News