செய்திகள்

இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி: பார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2017-09-22 10:55 GMT   |   Update On 2017-09-22 10:55 GMT
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அதிசய ஏரி பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.
பீஜிங்:

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள என்செங் நகரத்தில் மிகப்பெரிய உப்பு ஏரி உள்ளது. இது மிகவும் உவர் தன்மை உள்ளதாக காணப்படுகிறது. கடந்த 4 ஆயிரம் ஆண்டுகளாக சீன மக்கள் இந்த ஏரியிலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும், இந்த ஏரியில் சோடியம் சல்பேட் உப்பு அதிக அளவு உள்ளது. உலகிலேயே இந்த உப்பு அதிகம் உள்ள மூன்றாவது ஏரி இதுவாகும்.

இந்நிலையில், தற்சமயம் இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் டுனாலியேல்லா சலினா என்ற பாசியாகும். இந்த பாசி நீரினை நிறம் மாற்றும் தன்மை கொண்டது. இதனால் ஏரியானது ஒரு பக்கம் பச்சை நிறத்திலும், மற்றொரு பக்கம் இளஞ்சிவப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறது.

இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். இதே போன்று சென்ற ஆண்டு ஏரி ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஏரியில் அதிக அளவு உப்பு இருப்பதால் 'டெட் சீ' போன்று இதிலும் மனிதர்கள் மிதப்பார்கள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இதனை 'சீனாவின் டெட் சீ' என்று அழைக்கின்றனர்.

Tags:    

Similar News