செய்திகள்

இங்கிலாந்தில் உயிரணு தானம் மூலம் 60 குழந்தைக்கு தந்தையான நபர்

Published On 2017-09-02 10:29 GMT   |   Update On 2017-09-02 10:29 GMT
இங்கிலாந்தில் முறைப்படுத்தப்படாத முறையில் உயிரணு தானம் செய்து ஒருவர் 60 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார்.
லண்டன்:

இங்கிலாந்தில் உயிரணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் மூலம் பலர் குழந்தைக்கு தாயாகின்றனர். எனவே, முறைப்படுத்தப்பட்ட உயிரணு வங்கி மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் உள்ளன.

ஆனால் முறைப்படுத்தப்படாத முறையில் உயிரணு தானம் செய்து ஒருவர் 60 குழந்தைகளுக்கு தந்தையாகி இருக்கிறார். அவர் தனது மனைவிக்கு தெரிவிக்காமல் உயிரணுவை தானம் செய்துள்ளார்.

அது குறித்த தகவல் ஆவணப்படம் மூலம் வெளியானது. மேலும் 7 குழந்தைகள் பிறக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.


முறைப்படுத்தப்பட்ட உயிரணு தானம் மற்றும் சிகிச்சை மூலம் குழந்தை பெற பல லட்சங்கள் செலவாகிறது. ஆனால் முறைப்படுத்தப்பட்டாத உயிரணு தானம் மூலம் வெறும் 3 ஆயிரம் ரூபாயில் கருத்தரித்து குழந்தை பெற முடியும்.

எனவே முறைப்படுத்தப்படாத உயிரணு தானம் பெறுவோரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளது. உயிரணு தானம் செய்வோர் பேஸ்புக் குரூப்பில் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து உயிரணுவை தானம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News