செய்திகள்

தாய்லாந்தில் மன்னரை அவமதித்தவருக்கு 2½ ஆண்டு ஜெயில்

Published On 2017-08-16 05:55 GMT   |   Update On 2017-08-16 05:55 GMT
தாய்லாந்தில் மன்னர் வளிரலாங்கார்னை அவமதித்த மாணவர் அமைப்பை சேர்ந்த போராளிக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
பாங்காக்:

தாய்லாந்தின் புதிய மன்னராக வளிரலாங்கார்ன் (வயது 64) கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி ஏற்றார்.

அவர் குறித்து ‘பேஸ்புக்’ இணையதளத்தில் 2,600-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்து இருந்தனர். அவரது போட்டோக்களும் வெளியிடப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

தாய்லாந்தில் மன்னர் பற்றியோ, அவரது குடும்பத்தினர் பற்றியோ விமர்சிப்பது அவமரியாதையாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்வோர் மீது அவமதிப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, மாணவர் அமைப்பை சேர்ந்த போராளி அதுபட்பூன் பட்டாரக்சா என்பவர் பாங்காக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அத்தகைய தண்டனைக்கு ஐநா மனித உரிமை கமி‌ஷன் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News