செய்திகள்

போர்ச்சுகல்: வழிபாட்டுக் கூட்டத்தில் மரம் முறிந்து விழுந்து விபத்து - இரு குழந்தைகள் உள்பட 12 பேர் பலி

Published On 2017-08-15 18:24 GMT   |   Update On 2017-08-15 18:24 GMT
போர்ச்சுகல் நாட்டில் சர்ச் வழிபாட்டுக் கூட்டத்தில் 200 வருட பழமையான மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
லிஸ்பன்:

போர்ச்சுகல் நாட்டில் சர்ச் வழிபாட்டுக் கூட்டத்தில் 200 வருட பழமையான மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் உள்ள மடேய்ரா நகரில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தேவாலயத்தின் வெளியே இருக்கும் கார் பார்க்கிங் பகுதியில் திரளானோர் கூடியிருந்து வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர்.



அப்போது, அங்கு இருந்த சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று முறிந்து கூடியிருந்தவர்கள் மீது பலமாக விழுந்தது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். மரம் விழுந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனியா கோஸ்டா இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இதே நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 64 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News