செய்திகள்

பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் சுதந்திர தின வாழ்த்து

Published On 2017-08-14 19:16 GMT   |   Update On 2017-08-14 19:16 GMT
பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.

இத்தகவலை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்த டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News