செய்திகள்

போதைப் பொருள் கடத்தல்: ஈரானில் தூக்கு தண்டனையை குறைக்க சட்ட திருத்தம்

Published On 2017-08-14 06:24 GMT   |   Update On 2017-08-14 06:24 GMT
ஈரானில் தூக்கு தண்டனையை குறைக்க சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பின் அது நிறைவேற்றப்பட்டது.

தெக்ரான், ஆக. 14-

ஈரானில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படு கிறது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது.

எனவே, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இச்சட்ட வரையறை ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பின் அது நிறைவேற்றப்பட்டது.

அதன் மூலம் போதை பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை குறைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரசாயன பொருட்கள் கலந்த ஹெராயின், கோசைன், மற்றும் ஆம்படாமைன்ஸ் போன்ற போதை பொருட்களை 30 கிராம் முதல் 2 கிலோ வரை தயாரிப்பவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது.

அதே நேரத்தில் இயற்கை போதை பொருட்களான ஒபியம், மரிஞ்சுனா போன்றவற்றை 5 கிலோ முதல் 50 கிலோவரை கடத்துபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

இதற்கு முன்பு மிக குறைந்த அளவில் போதைப் பொருள் வைத்திருந்தாலோ அல்லது கடத்தினாலோ தூக்கு தண்டனை விதிக்கப்படும். தற்போது கொண்டு வந்துள்ள இந்த சட்ட திருத்தத்தின் மூலம் மரண பிடியில் இருக்கும் பலரது உயிர் பாதுகாக்கப்படும்.

Tags:    

Similar News