செய்திகள்

கருப்பு பண தகவல் பரிமாற்றம்: சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு வெளியீடு

Published On 2017-08-06 19:43 GMT   |   Update On 2017-08-06 19:43 GMT
இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு சுவிட்சர்லாந்து வழங்க திட்டமிட்டு உள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019-ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்ன்:

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கோடிக்கணக்கில் கருப்பு பணம் பதுக்கி உள்ளனர். இது பற்றிய தகவல்களை இந்தியாவுடன் தானாகவே பகிர்ந்துகொள்ள வகை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் கையெழுத்து போட்டுள்ளன.

இதன்படி அங்கு பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு அந்த நாடு வழங்க திட்டமிட்டு உள்ளது. இதில் முதற்கட்ட தகவல்கள் 2019-ம் ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விவரங்களை பரிமாறுவது தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு விரிவான அறிவிப்பு ஒன்றை தனது அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதில் ‘இந்தியாவுடன் கருப்பு பண தகவல்கள் பரிமாற்றத்துக்கு, அந்த நாட்டின் தரவு (டேட்டா) பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை சட்டங்கள் போதுமானதாக இருப்பதை சுவிட்சர்லாந்து கண்டுகொண்டுள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் காப்பீட்டுத்துறை மற்றும் பிற நிதிச்சேவைகள் உள்பட இந்திய சந்தையை அதிகமாக அணுக சுவிட்சர்லாந்து விரும்புவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News