செய்திகள்

போக்கோ ஹராம் தீவிரவாதிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட மாணவிகளுடன் மலாலா சந்திப்பு

Published On 2017-07-19 12:41 GMT   |   Update On 2017-07-19 12:41 GMT
நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட மாணவிகளை நோபல் பரிசு பெற்ற மலாலா சந்தித்து பேசினார்.
அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் 2014 ஆம் ஆண்டு போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் மூன்றாண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களை நோபல் அமைதி பரிசு பெற்ற பெண் கல்வி ஆர்வலரான மலாலா யூசுப்சாய் திங்கட்கிழமை சந்தித்து அவர்களிடையே உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையில், ‘நைஜீரியாவிற்கு வந்திருப்பது பெண்களின் சக்தியை அதிகரிப்பதற்காக உலகளவில் நான் மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாகும். இங்குள்ள இளம் பெண்களிடம் உரையாற்றுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இவர்கள் பல ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்தார்கள். தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லாதிருப்பது வருத்தமளிக்கிறது. விரைவில் அவர்கள் குடும்பத்துடன் சேர்வார்கள் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மலாலாவின் உரையை கேட்ட நைஜீரியாவில் உள்ள பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மேலும் அவர்கள் மலாலாவிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 
இதையடுத்து மலாலா நைஜீரியா அதிபரை சந்தித்து, தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கல்வியை பற்றி ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News