செய்திகள்

ஜெர்மனியில் ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Published On 2017-07-06 00:20 GMT   |   Update On 2017-07-06 00:20 GMT
ஜெர்மனியில் அரசு எதிர்ப்பாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பர்க் நகரில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹம்பர்க்:

ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜி-20 மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன் உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள் கிறார்கள். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

நேற்று முன்தினம் இரவு அரசு எதிர்ப்பாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஜி-20 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பர்க் நகரில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர் களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர்.



இதற்கிடையே ஜி-20 மாநாட்டின்போது ஹம்பர்க் நகரில் போராட்டக்காரர்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி மற்றும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன. இந்த போராட்டத்தில் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹம்பர்க் நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 
Tags:    

Similar News