search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water cannon"

    • பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீன கடலோர காவல்படை தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
    • சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என மிரட்டி வருகிறது

    தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அடிக்கடி தென் சீனக் கடலில் மோதல் நடக்கிறது.

    பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.



    இந்நிலையில் தற்போது தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியது. இதனால் தென் சீனக் கடலில் இன்று பதட்டம் ஏற்பட்டது.

    இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது :-

    சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலை இன்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை சுட்டது. கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது.



    சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது. சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.


    ×