செய்திகள்

ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபர் தோழிக்கு 3 ஆண்டு ஜெயில்

Published On 2017-06-23 05:33 GMT   |   Update On 2017-06-23 06:07 GMT
ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபர் தோழிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சியோல்:

தென் கொரிய முன்னாள் பெண் அதிபர் பார்க்ஜி யுன்-ஹை. இவர் ஊழல் செய்ததால் பாராளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவரது நெருங்கிய தோழி சோய் சூன்-சில். இவர் அதிபராக இருந்த பார்க்கின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டு பணம் குவித்தார்.

தேர்வு எழுதாமலேயே தனது மகளுக்கு பல்கலைக் கழகத்தில் சேர அனுமதி பெற்றார். இந்த குற்றச் சாட்டின் மீது இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News