செய்திகள்

இந்தோனேசியாவில் இரட்டை குண்டு வெடிப்பு - மூன்று போலீசார் பலி

Published On 2017-05-24 23:48 GMT   |   Update On 2017-05-24 23:48 GMT
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜகார்தா:

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்தப்பகுதியில் நேற்று பயங்கர சப்தத்துடன் இரு வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த மூன்று போலீசார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து போலீசார் உள்ளிட்ட 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவினர் அருகிலுள்ள பாண்டென், மேற்கு ஜாவா மாகாணங்களில் இரு வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.

உலகில் முஸ்லிம் மதத்தினர் அதிகமாக வசிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த 2002-ம் ஆண்டில் அல்-கொய்தா இயக்கத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 202 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
Tags:    

Similar News