செய்திகள்

ஆசியாவிலேயே முதன் முறையாக தைவானில் ஓர் பாலின திருமணத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

Published On 2017-05-24 20:37 GMT   |   Update On 2017-05-24 23:46 GMT
ஆசிய நாடுகளிலேயே முதன் முறையாக தைவானில் ஓர் பாலின திருமணத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
தைபே:

ஆசிய நாடுகளிலேயே முதன் முறையாக தைவானில் ஓர் பாலின திருமணத்திற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

தைவான் நாட்டில் ஓர் பாலின திருமணத்திற்கு அரசு தடைச் சட்டம் விதித்தது. ஒர் பாலினத்தவர் திருமணம் செய்ய அனுமதிக்குமாறு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது, அதை எதிர்த்தும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஒரே பாலினத்தவர் திருமணத் தடைச் சட்டங்கள் பொதுமக்களின் உரிமைகளை நேரடியாக மறுப்பதற்குச் சமம். மேலும் இது போன்ற திருமணங்கள் செல்லத்தக்கது அல்ல என்ற வாதம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று தெரிவித்துள்ளது.

ஓர் பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் வண்ணம் தேவையான சட்டங்களை இயற்றவும் அந்நாட்டு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கும் முதல் ஆசிய நாடாக தைவான் இடம்பெற்றுள்ளது. 
Tags:    

Similar News