செய்திகள்

அதிநவீன தொழில் நுட்பத்துடன் கண் பார்வையற்றோர் - காதுகேளாதோருக்கு டி.வி.

Published On 2017-05-22 06:09 GMT   |   Update On 2017-05-22 06:09 GMT
கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய டி.வி. உருவாக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் அதிநவீன தொழில் நுட்பங்கள் உருவாகி வருகின்றன. தற்போது கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு டி.வி. நிகழ்ச்சிகள் வேறு ஒருவரின் சைகை மூலம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அவர்களும் டி.வி. நிகழ்ச்சிகளை வேறு ஒருவரின் துணையின்றி தாங்களாகவே உணர்ந்து ரசிக்கும் வகையில் புதிய டி.வி. தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள யுனிவர்சிடட் கரோல்ஸ் 3டி மாட்ரிட் என்ற நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் புதிய ஆய்வு மூலம் டி.வி.யில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இவர்கள் பிரைலி மூலம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப் உருவாக்கி அதன் மூலம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் டி.வி. நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இதன் சோதனை ஓட்டம் மாட்ரிட் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது.
Tags:    

Similar News