செய்திகள்

ஆப்கானிஸ்தான்: போலீசாரை குறிவைத்து தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி

Published On 2017-05-22 00:27 GMT   |   Update On 2017-05-22 00:27 GMT
ஆப்கானிஸ்தானில் சோதனைசாவடிகளில் உள்ள போலீசாரை குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 25 போலீசார் பலியாகினர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் சோதனைசாவடிகளில் உள்ள போலீசாரை குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 25 போலீசார் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜபூல் மாகாணம் ஷா ஜாய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் நேற்று போலீசார் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள் போலீசாரை குறிவைத்து கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.

தாலிபான்களின் இந்த தாக்குதலில் 25 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இந்த ஆண்டு மற்றொரு சவாலான ஆண்டாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News