செய்திகள்

காபூல் விருந்தினர் மாளிகையில் தாக்குதல்: ஜெர்மன் பெண்மணி, ஆப்கான் காவலர் பலி

Published On 2017-05-21 13:50 GMT   |   Update On 2017-05-21 13:50 GMT
காபூல் நகரில் உள்ள சுவீடன் நாட்டைச் சேர்ந்த விருந்தினர் மாளிகையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் ஜெர்மனி பெண்மணி மற்றும் ஆப்கான் காவலர்கள் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.
காபூல்:

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி ஏந்திய மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த தாக்குதல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் உதவியாளர் மற்றும் ஆப்கானை சேர்ந்த காவலர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மேலும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் விருந்தினர் மாளிகையில் இருந்து கடத்தப்பட்டார். தங்கள் நாட்டு பெண் கடத்தப்பட்டதை ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள பின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டது சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிவாரண மற்றும் மேம்பாட்டு அமைப்பு இருந்த இடம் ஆகும். இதில் இரண்டு பெண்கள் வேலை செய்து வந்தனர். அதில் ஒரு பெண்ணை தான் கடத்தியுள்ளனர்.



சனிக்கிழமை(நேற்று) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Tags:    

Similar News