செய்திகள்

சிரியா-ஈராக்கில் குர்து பகுதியில் துருக்கி குண்டுவீச்சு: 23 பேர் பலி

Published On 2017-04-26 05:40 GMT   |   Update On 2017-04-26 05:41 GMT
சிரியா, மற்றும் ஈராக்கில் உள்ள குர்து பகுதிகள் மீது நேற்று துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தினார்கள். இதில் குர்து இனத்தை சேர்ந்த 23 பேர் பலியாயினர்.

அங்காரா:

ஈராக் மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் குர்து இனத்தவர் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில் குர்து இன மக்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆதரவுடன் அமெரிக்காவும், ரஷியாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

ஆனால் குர்து இனத்தவர்கள் அண்டை நாடான துருக்கிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துருக்கிக்குள் ஊடுருவி தாக்குதல்கள் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சிரியா, மற்றும் ஈராக்கில் உள்ள குர்து பகுதிகள் மீது நேற்று துருக்கி போர் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு நடத்தினார்கள்.


அதில் குர்து இனத்தை சேர்ந்த 23 பேர் பலியாகினர் சிரியாவில் 18 பேரும், ஈராக்கில் 5 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

துருக்கி நடத்திய குண்டு வீச்சுக்கு ஈராக் அரசு. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் துருக்கியின் நட்பு நாடான அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள துருக்கி அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன், குண்டு வீச்சு தாக்குதல் குறித்து அமெரிக்கா, ரஷியா மற்றம் ஈராக்கிடம் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தள்ளார்.

Similar News