செய்திகள்

மெக்சிகோவில் வன்முறை சம்பவங்களில் 35 பேர் பலி

Published On 2017-04-24 20:35 GMT   |   Update On 2017-04-24 20:35 GMT
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 உயர்ந்தது
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் ரீதியான போட்டியில் இந்த குழுக்களுக்கிடையே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் வெடிக்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம், சினலோவ் மாகாணத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதே போல், மிசோகன் மாகாணத்தில் 2 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 9 பேர் பலியாகினர்.

இதற்கிடையே, குர்ரெர்ரோ மாகாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதே போல் வெராகுருஸ் மாகாணத்தில் இருந்து 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

எனவே, போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆகியது.

Similar News