செய்திகள்

சவுதி அரேபியாவில் வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணி அமர்த்த தடை

Published On 2017-04-23 07:23 GMT   |   Update On 2017-04-23 07:23 GMT
வேலையின்றி தவிக்கும் சவுதி அரேபியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த அரசு தடை விதித்துள்ளது.

ரியாத்:

எண்ணை வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் உள்ள வணிக வளாகங்களில் வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இனி அங்குள்ள வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த சவுதிஅரேபிய அரசு தடை விதித்துள்ளது.

சவுதிஅரேபியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு புதிதாக 35 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சவுதிஅரேபியாவில் எண்ணை வளத்தை மட்டுமே நம்பி இல்லாமல் வணிக ரீதியில் முன்னேற்றம் அடையவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

வேலையின்றி தவிக்கும் சவுதி அரேபியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த அரசு தடை விதித்துள்ளது.

Similar News