செய்திகள்

இந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகள் காரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2017-04-22 05:48 GMT   |   Update On 2017-04-22 05:48 GMT
இந்தியா வறட்சிக்கு ஐரோப்பிய நாடுகளே காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மழையின் அளவு படிப்படியாக குறைந்து வறட்சி நிலவி வருகிறது. அதற்கு ஐரோப்பிய நாடுகளே மிக முக்கியமான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதற்கு கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியாவில் பெய்த மழையில் சல்பர்டை ஆக்சைடு கலந்து இருப்பது தெரியவந்தது.

இது இந்தியாவில் வடமேற்கு பகுதியில் பெய்த மழை நீரில் அதிக அளவில் கலந்து இருந்தது. சல்பர்டை-ஆக்சைடு அதிலும் மழை நீரில் 40 சதவீதம் கலந்து இருந்ததற்கு காற்று மாசு காரணம் என கூறப்படுகிறது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள வட மேற்கு மற்றும் தென் மேற்கு நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து சல்பர்- டை-ஆக்சைடு வெளியாகிறது. அவை காற்றில் மாசு ஆக படிந்து மழைநீருடன் மீண்டும் பூமிக்கு வருகிறது.

இதனால் பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் கடுமையான நோய்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்று சூழலில் பாதிப்பு உருவாகி மனிதர் இருதயம் மற்றும் நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகின்றன.


அதே நேரத்தில் பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் இந்தியாவில் படிப்படியாக வறட்சி ஏற்பட்டது என ஆய்வு தெரிவித்துள்ளது.

Similar News