செய்திகள்

அமெரிக்காவில் கொலையை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட கொலையாளி போலீஸ் தேடுகிறது

Published On 2017-04-18 05:22 GMT   |   Update On 2017-04-18 05:22 GMT
அமெரிக்காவில் கொலையை ‘பேஸ்புக்’ கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கொலையாளியை போலீஸ் தேடி வருகிறது.

சிகாகோ:

அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை அன்று முதியவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், ஓகியோ மாகாணம் கிளீங் வேண்டில் ஈஸ்டர் விருந்தை முடித்துவிட்டு 74 வயது முதியவர் ராபர்ட் சாட்வின் என்பவர் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவரை வழி மறித்து ஸ்டீவ் ஸ்டீபன் என்ற 37 வயது கொலையாளி துப்பாகியால் சரமாரி சுடுகிறான். எனவே ராபர்ட் சாட்வின் பரிதாபமாக உயிரிழக்கிறார்.

இதை கொலையாளி ஸ்டீங் ஸ்டீபன் ‘பேஸ்புக்’கில் தனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறான். மேலும், நான் ஏற்கனவே 13 பேரை கொலை செய்து இருக்கிறேன். எனது 14 வயதில் இருந்தே இத்தொழிலை செய்து வருகிறேன் என்று அவன் பேசிய ஆடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.

இது பொது மக்கள் மத்தியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கிளீவ் லேண்ட் போலீசார் கொலையாளி ஸ்டீபனை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலையாளி ஸ்டீபன் ஒகியோ மற்றும் 4 அண்டை மாகாணங்களில் உலா வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அவன் இருப்பிடம் தெளிவாக தெரியவில்லை. அவன் அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் போலீசார் கூறியுள்ளனர்.

Similar News