செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பேரணி

Published On 2017-03-25 15:15 GMT   |   Update On 2017-03-25 15:15 GMT
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இன்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
லண்டன்:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டாம் என்று வாக்களித்தனர்.

மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் மசோதாவுக்கு பிரிட்டன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இன்னும் சில தினங்களில் அதற்கான நடைமுறைகளை பிரதமர் தெரசா மே தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு ஒருபுறமிருக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. அவ்வகையில் லண்டனில் இன்று பாராளுமன்ற சதுக்கம் நோக்கி பேரணி நடைபெற்றது. அங்கு சென்றதும், வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் தீவிரவாதி நடத்திய தாக்குதல் காரணமாக 4 பேர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘ஸ்டாப் பிரெக்சிட், ஐ லவ் இ.யு, ஹேப்பி பெர்த்டே இ.யு. என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்கள் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்திக்கொண்டும், கோஷமிட்டவாறும் போராட்டக்காரர்கள் சென்றனர்.

Similar News